Home WORLD NEWS இறந்த குழந்தையை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து உயிருடன் வந்த குழந்தையால் பரபரப்பு

இறந்த குழந்தையை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து உயிருடன் வந்த குழந்தையால் பரபரப்பு

187
Loading...

இறந்த தனது குழந்தையை புதைக்க அதன் தந்தை தோண்டிய குழிக்குள் பெண் குழந்தையொன்று உயிருடன் இருந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் பரேலியைச் சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோஹி. பொலிஸ் ஆய்வாளராக உள்ளார்.

இவரது குழந்தை பிறந்து சில நிமிடங்களில் கடந்த புதன்கிழமை இறந்துபோனது.

இதனையடுத்து இறந்த தனது குழந்தையைப் புதைக்க இடுகாடொன்றில் அவர் குழி தோண்டினார்.

மூன்றடி ஆழத்துக்கு தோண்டிய குழிந்குள் ஒரு மண்பானை இருந்துள்ளது. அந்தப் பானைக்குள் இருந்து குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது.

இறந்துபோன எனது குழந்தை உயிர்பெற்றுவிட்டதோ என எனக்குள் ஒரு எண்ணம் ஏற்பட்டது என ஹிதேஷ் குமார் சிரோஹி தெரிவித்தார்.

அந்தப் பானையைத் தூக்கிப் பார்த்தபோது அதற்குள் பிறந்து சில நாட்களேயான குழந்தை ஒன்று இருந்தது.

Loading...

சிறிது நேரத்துக்கு முன்னரே அந்தக் குழந்தை இங்கு புகைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

உடனடியாக அந்தக் குழந்தை மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இப்போது மருத்துவமனையில் அந்தக் குழந்தை நலமாக உள்ளது.

அந்த குழந்தையின் உயிரை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். தற்போது அதன் தாய், யார்? என்று விசாரித்து வருகிறோம்? என ஹிதேஷ் குமார் சிரோஹி தெரிவித்துள்ளார்.

நான் குழி தோண்டிய இடத்தில் இருந்து சற்றுத் தள்ளி குழியொன்றைத் தோண்டியிருந்தால் இந்தக் குழந்தையைக் காப்பாற்றியிருக்க முடியாது. கடவுளின் கருணைதான் என்னை அந்த இடத்தில் குழி தோண்ட வைத்துள்ளது என குமார் சிரோஹி கூறினார்.

பிதாரி சயின்பூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் மருத்துவ செலவுகளை தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை இடம்பெற்று வருகிறது

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here