Home LOCAL NEWS பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 கிலோ நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனை

பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 கிலோ நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனை

96
Loading...

பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 கிலோ கிராம் நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர்.

சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (05) முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாகவும், இது சுமார் 2 மணித்தியாலம் இடம்பெற்றதன் பின்னர் அந்தக்கட்டியை அகற்றினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“19.5 கிலோ கிராம் நிறையையும் சுமார் 48 சென்ரி மீற்றர் நீளத்தையும் 34 சென்ரி மீற்றர் அகலத்தையும் 23 சென்ரி மீற்றர் உயரத்தையுமுடைய பெரும் கட்டி ஒன்றை வெட்டி அகற்றிய சாதனையை எமது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்களினால் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்ட சத்திர சிகிச்சை நிபுணர்கள் எஸ்.எஸ்.ஜமீல், பீ.கே.இரவீந்திரன், மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர் யுரேக்கா விக்ரமசிங்க, மயக்க மருந்து மருத்துவ நிபுணர் றுவான் குருப்பு, மயக்க மருந்து மற்றும் சத்திரசிகிச்சை மூத்த மருத்துவர்கள், சத்திர சிகிச்சை கூட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட குழுவினரால் இது முன்னெடுக்கப்பட்டன.

Loading...

தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் புறச்சூழல் அழகுபடுத்தப்பட்டு சுற்றாடல் நேய செயற்றிடங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

தாய்சேய் நலனிற்காக சிறப்பு விடுதி ஒன்றும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது” என்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here