Home LOCAL NEWS முச்சக்கர வண்டிச் சாரதி கொலை – சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்!

முச்சக்கர வண்டிச் சாரதி கொலை – சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்!

2543
Loading...

வவுனியாவில் முச்சக்கரவண்டிச் சாரதி கடத்திக்கொலை செய்யப்பட்ட எரியூட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பிலும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் பலதரப்பட்ட கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் கொலையாளி என சந்தேகிக்கும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து அந்நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அவர் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தெரியவருகிறது.

தனி நபராக தானே கொலையைப் புரிந்ததாக அவர் தெரிவித்தாகவும்,
குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் கழுத்திலிருந்த ஒரு பவுண் தங்க சங்கிலி மற்றும் அவர் அணிந்திருந்த 1/2 பவுண் மோதிரத்திற்காவுமே கொலை செய்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

Loading...

ஏற்கனவே கடந்த 07.10.2019 அன்று கொலை செய்ய திட்டம் தீட்டி நெடுங்கேணிக்கு அழைத்து சென்றதாகவும் எனினும் அன்றைய தினம் கொலை செய்ய முடியாமல் போனதால் மீண்டும் 09.10.2019 அன்று தனது திட்டத்தின்படி கொலை செய்ததாகவும் தனது வாக்குமூலத்தில் குறிநத்த சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

சந்தேக நபரை நாளை அல்லது நாளை மறுதினம் வவுனியா நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here