Home LOCAL NEWS யாழில் வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதால் இளைஞர் கோடாரியால் அடித்துக் கொலை

யாழில் வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதால் இளைஞர் கோடாரியால் அடித்துக் கொலை

387
Loading...

யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டம் பகுதியிர் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் லைகலப்பாக மாறி கொலையில் முடிவடைந்தது. இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மணியந்தோட்டம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது-33) என்பவரே கொலை செய்யட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொழும்புத்துறை பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல் நிலை இருந்தது. இன்றும் வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியது.

Loading...

அந்த நபர் கோடரியால் இளைஞரின் தலையில் அடித்துள்ளார். தலையில் பலமாக அடிபட்டதால், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here