
தமிழுக்கு முன்னுரிமை என கூறி தமிழ் எழுத்துக்களை முதலில் எழுதி அறிவுப்புப் பலகைகளை விமானநிலையத்தில் தொங்கவிட்டு விட்டு தமிழர்களை ஏமாற்றிவிட்டு சிங்களம் தனது திருவிளையாடலைக் காட்டியுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
குறிப்பாக எதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படவுள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளுக்கு 93 சிங்கள இளைஞர்கள் யுவதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் கூட தமிழ் மாகாணத்திலேயே எமது இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்