Home LOCAL NEWS 3 டன் கடலட்டைகளுடன் கைதான மீனவர்கள் – படங்கள்

3 டன் கடலட்டைகளுடன் கைதான மீனவர்கள் – படங்கள்

321
Loading...

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 3 டன் எடைகொண்ட கடல் அட்டைகளுடன் நாட்டுப் படகு ஒன்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபம் தெற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே கடலில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற நாட்டுப் படகை சோதனை செய்ய முயன்ற போது இருவர் படகில் இருந்து கடலில் குதித்து தப்பிக்க முயற்ச்சித்தனர். அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த வனத்துறையினர் நாட்டு படகை சோதனை செய்தனர்.

படகில் 261 மூடைகளில் 3,200 கிலோ எடை கொண்ட பதபடுத்தப்படாத கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் படகின் மதிப்பு 40 லட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading...

இதேவேளை, மன்னார் சௌத்பார் கடற்பகுதியில் 55 கடல் அட்டைகளுடன் 3 பேரை கடற்படையினர் நேற்று சனிக்கிழமை (12) கைது செய்துள்ளனர். வட மத்திய கடற்படையினர் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது, அனுமதி இல்லாமல் சௌத்பார் கடலில் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கடல் அட்டை பிடிக்க பயன் படுத்தப்பட்ட டிங்கி -1, ஓ.பி.எம்-1, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்-5 ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் போது கைது செய்யப்படட சந்தேக நபர்கள் மூவரும் மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here