தொற்றா நோய் தடுப்பு குடிசை(NCD HUT) அங்குரார்ப்பணம்

பாறுக் ஷிஹான் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொற்றா நோய் தடுப்பு குடிசை(NCD HUT) ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் றஹ்மான் தெரிவித்தார். குறித்த வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை(8) தொற்றா நோய் தடுப்பு குடிசையை அங்குரார்ப்பணம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது கருத்தில் தொற்றா நோய் உலகில் ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்களுடைய உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி இன்மையுமாகும்.குறிப்பாக எமது பிரதேசத்தில் தொற்றா நோய் பாதிப்பு அதிகமாக...

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விஜய தசமி பூசை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (8) நவராத்திரி விழாவின் இறுதிநாளாகிய விஜய தசமி பூசைகள் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா தலைமையில் இடம்பெற்றது. பஜனை பாடல்களுடன் ஆரம்பமான வாணிவிழா பூஜைகள் சிவசிறி தி. தேவகுமார் ஆச்சாரியாரினால் இந்துசமய மரபுகளுடன் நடார்த்தி வைக்கப்பட்டது . இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்களின் நவராத்திரி பூஜை விளக்குமுகமாக கவிதை,நடனம்,பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது . இதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற...

மீனவர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து எதுவும் தெரியாது-பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது- மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து காணாமல் போன மீனவர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளராகிய நீங்கள் சொல்லும்வரை தனக்கு எதுவும் தெரியவில்லை என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன மீனவர்கள் பற்றிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்து ஊடகவியலாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை(8) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அமைச்சரை கேட்டபோது மேற்கண்டவாறு கூறினார். கடந்த 18.09.2019 ஆம் திகதி காணாமல்...

ஆற்றில் மிதக்கும் சடலம் ஆசிரியையுடையதா? பொலிசார் தீவிர விசாரணை!

ஹட்டன் ஸ்ரீபாத வித்யாலயத்தின் ஆங்கில ஆசிரியை காணாமல் போய் ஒரு வாரமாகியும் எந்த தடயமும் கிடைக்காமல் பொலிசார் திண்டாடி வருகின்றனர். அட்டனிலுள்ள பாடசாலையிலிருந்து கம்பொலவின் கீரபன பகுதிக்கு வந்த, சண்திம நிசன்சலா ரத்நாயக்க (27) என்ற இளம் ஆசிரியையே காணாமல் போனார். கடந்த 1ம் திகதி மாலை 4 மணியளவில் வீட்டுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராவில் அவரது வீடு திரும்பும் காட்சி பதிவாகியிருந்தது. குடை பிடித்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எனினும், சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள வீட்டை அவர் அடைந்திருக்கவில்லை. இது தொடர்பாக, ஆசிரியையின் பெற்றோர் பொலிஸ்...

மாணவனின் உயிரைப் பறித்த பிக் கப்!! சிங்கள சாரதி மீது பொதுமக்கள் தாக்குதல் – சாரதியைக் காப்பாற்ற பொலிஸார்...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவரை கப் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் ஒன்றுதிரண்டு வாகனத்தைச் செலுத்தி வந்த சிங்கள சாரதியை தாக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் சாரதியை பொது மக்களிடமிருந்து மீட்டுச் சென்றனர். அத்துடன், சாரதியைத் தாக்கியதாக பொதுமக்கள் சிலர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர். அதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. எனினும் சாரதியை தம்மிடம் ஒப்படைக்கும் வரை வாகனத்தை விடுவிக்க முடியாது என்று...

ஆட்சிக்கு வரும் முன்பே அட்டகாசம் ஆரம்பம்..! யாழ்.மாநகரசபை உறுப்பினருக்கு உயிா் அச்சுறுத்தல்

தன்னுடைய வீட்டு மதிலில் தோ்தல் சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம். என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவின் ஆதரவாளா்கள் அச்சுறுத்தல் விடுத் துள்ளதுடன், வீட்டு சுவற்றில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் 50 – 5048 எனும் இலக்கமுடைய வெள்ளை நிற ஹைஏஸ் ரக வாகனத்தில் வந்தே சுவரொட்டிகளை ஒட்டி சென்றனர் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நேற்று இரவு கோத்தாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் நல்லூர் பருத்தித்துறை வீதியில்...

06. 10. 2019 இன்றைய இராசி பலன்கள்

மேஷம் இன்று மனதில் இருந்த கவலை நீங்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது...

மருதமுனையில் பாடசாலை மாணவன் கைது

பாறுக் ஷிஹான் போதை மாத்திரையுடன் பாடசாலை மாணவன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை(5) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வைத்து மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உயர் தரம் கலைப்பிரிவில் கல்விபயிலும் அப்துல் ரசாபீ முகம்மட் அஷ்லம் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு கைதானார். மருதமுனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கைதான மாணவனிடம் இருந்து 1050 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்...

பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 கிலோ நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனை

பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 கிலோ கிராம் நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார். நேற்று முன்தினம் (05) முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாகவும், இது சுமார் 2 மணித்தியாலம் இடம்பெற்றதன் பின்னர் அந்தக்கட்டியை அகற்றினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். “19.5 கிலோ கிராம் நிறையையும் சுமார் 48 சென்ரி மீற்றர் நீளத்தையும் 34 சென்ரி மீற்றர் அகலத்தையும்...

வறுமையிலும் வரலாற்றுச் சாதனை படைத்த மாணவி – வாழ்த்துவோம் உறவுகளே!!

பெற்றோரை இழந்து அம்மம்மா மற்றும் ஒரு காலை இழந்த தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந் து வரும் ஒட்டுசுட்டான் அலைகல்லுபோட்டகுளம் மாணவி தரம் 5 புலமை பாிசில் பரீட்சையில் 157 புள்ளிகளை பெற்று உண்மையான சாதனையை நிகழ்த்தியுள்ளாா். முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் வலயத்தில் ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அமைந்துள்ள. மு/அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. ஜெயராசசிங்கம் அகலிசை 2019 தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையில் 157 புள்ளிகளை சித்தியடைந்துள்ளாா். இந்த சித்தி அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க பாடசாலை வரலாற்றில் முதல் சாதனையாம். போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பகுதியில்...