இரண்டு மாணவிகளை பாலத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர்… புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சிக்கினார்

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் இருவர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் பத்து மாதங்களுக்கு பின்னர் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மைக்கேல் பாளையத்தை சேர்ந்த ஓவியா (14), சுகந்தி (16) என்ற இரண்டு பள்ளி மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் மாயமானார்கள். 3 நாட்கள் கழித்து அத்தானி அருகே பவானி ஆற்றில் அவர்களது சடலங்கள் மிதந்தன. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முன்னேற்றம் இல்லாத சூழலில், சிபிசிஐடி விசாரணை கோரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர். இந்நிலையில்,...

யாழ் விமான நிலையத்தில் 93 சிங்கள இளைஞர்கள் யுவதிகள்!!! தமிழர்களுக்கு இடமில்லை!!

தமிழுக்கு முன்னுரிமை என கூறி தமிழ் எழுத்துக்களை முதலில் எழுதி அறிவுப்புப் பலகைகளை விமானநிலையத்தில் தொங்கவிட்டு விட்டு தமிழர்களை ஏமாற்றிவிட்டு சிங்களம் தனது திருவிளையாடலைக் காட்டியுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். குறிப்பாக எதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படவுள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளுக்கு 93 சிங்கள இளைஞர்கள் யுவதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் கூட தமிழ் மாகாணத்திலேயே எமது இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்...

இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்து நேற்றையதினம் (13) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் இவ் விபத்தில் பலியான ஷர்மிலன் இத்தாலிய பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளதுடன், ஒரு குழந்தையின் தந்தையுமாவார். மேலதிக விசாரணைகளை இத்தாலி நாட்டின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறந்த குழந்தையை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து உயிருடன் வந்த குழந்தையால் பரபரப்பு

இறந்த தனது குழந்தையை புதைக்க அதன் தந்தை தோண்டிய குழிக்குள் பெண் குழந்தையொன்று உயிருடன் இருந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் பரேலியைச் சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோஹி. பொலிஸ் ஆய்வாளராக உள்ளார். இவரது குழந்தை பிறந்து சில நிமிடங்களில் கடந்த புதன்கிழமை இறந்துபோனது. இதனையடுத்து இறந்த தனது குழந்தையைப் புதைக்க இடுகாடொன்றில் அவர் குழி தோண்டினார். மூன்றடி ஆழத்துக்கு தோண்டிய குழிந்குள் ஒரு மண்பானை இருந்துள்ளது. அந்தப் பானைக்குள் இருந்து குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது. இறந்துபோன எனது குழந்தை உயிர்பெற்றுவிட்டதோ...

சற்று முன்னர் கிடைத்த செய்தி..! பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..!!

இந்தியவின் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் வெற்றிகரமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (பலாலி) தரையிறங்கியது Airindia Alliance விமானம். அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து வருகின்றனர். இதேவேளை 17 ஆம் திகதி திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இன்றைய ராசிப்பலன் – 15.10.2019

மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ரிஷபம் இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும். மிதுனம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின்...

விசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல் – படங்கள்

பாறுக் ஷிஹான் மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு 19 இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் மற்றும் 12 இலட்சம் ரூபாய்களை பெற்று பாரிய நிதி மோசடி மேற்கொண்ட யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த சதாசிவம் தியாகராஜா என்பவருக்கு எதிராக விசேட நிதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபருக்கு எதிராக...

இன்றைய ராசிபலன் – 14.10.2019

மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினை சற்று குறையும். மிதுனம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்....

குழப்பி விட்ட “பிகில்” ட்ரெய்லர் – மண்டையை பிச்சிக்கும் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகயுள்ள "பிகில்" படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இந்த டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் சுமார் 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், 62 நிமிடம் கிட்டதட்ட ஒரே மணிநேரத்தில் 1 மில்லியன் லைக்குகளையும் இந்த பிகில் படத்தின் டிரைலர் யூடியூபில் பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ‘பிகில்’ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே ட்ரெய்லர் பட்டய கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம்...

3 டன் கடலட்டைகளுடன் கைதான மீனவர்கள் – படங்கள்

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 3 டன் எடைகொண்ட கடல் அட்டைகளுடன் நாட்டுப் படகு ஒன்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் தெற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை...