பிரான்சில் இருந்து பணம்?? சினைப்பருடன்முன்னாள் போராளி!!? விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள் – படங்கள்

திருகோணமலையில் வைத்துக் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியை பிரான்சிலிருந்து ஒருவர் இயக்கியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியிலிருந்து சினைப்பர் துப்பாக்கியுடன் கருணாவை போட்டுதள்ளும் நோக்குடன் அவர் மூதூருக்குச் சென்றவேளையிலேயே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் தகவல்கள் தெரிவித்ததாவது: திருகோணமலை சேருநுவர பகுதியில் வைத்து கிளிநொச்சி அம்பாள்குளத்தைச் சேர்ந்த ரொபின் என்ற முன்னாள் போராளி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அவர் திருகோணமலையில் தங்கியிருந்த விடுதி அறையை இராணுவத்தினர் சோதனையிட்ட போது, அங்கு சினைப்பர் ரக துப்பாக்கி...

நண்பர்களுடன் மது விருந்து!! வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞனிற்கு யாழில் நேர்ந்த விபரீதம்

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் விருந்திற்கு சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் இன்று (13) இந்த சம்பவம் நடந்தது. பூநகரியை சேர்ந்த ரஜீவன் (வயது 31) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து கூழ், மது விருந்திற்காக நேற்றிரவு கைதடியிலுள்ள வீடொன்றிற்கு வந்துள்ளார். அங்கு நண்பர்கள் சேர்ந்து விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் நேற்றிரவு நண்பர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். அப்போது திடீரென ரஜீவன் வாந்தி எடுத்துள்ளார். அது சாதாரணமானதாக கருதியதால் அனைவரும் உறங்கி விட்டனர். இன்று காலையில் ரஜீவன் எழுந்திருக்காததையடுத்து, அவரை தட்டியெழுப்பியபோதே,...

வீட்டின் மீது முறிந்து வீழ்ந்த மரம்!! 19 வயது பெண் மற்றும் இரு சிறுவர்கள் பலி- படங்கள்

வெலிமடை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு பெய்த கன மழையின் காரணமாக வீட்டுக்கு அருகில் இருந்த மரமொன்று முறிந்து வீட்டின் மீது வீழ்ந்துள்ளது. வெலிமடை பிரதேச சபைக்கு அருகில் உள்ள தற்காலிக வீட்டில் நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10, 13, 19 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பலியான இரு சிறுவர்களும் சூரஞ்சனியின் உறவுக்கார சிறுவர்கள் என்றும் இரவு பொழுதை கழிப்பதற்காக தங்கள்வீட்டில்...

இன்றைய ராசிபலன்கள் – 13.10.2019

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்ககூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். ரிஷபம் இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மிதுனம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்....

கிளிநொச்சியில் பதற்றம்..! முன்னாள் போராளியின் வீட்டில் பெருமளவு ஆயுதங்கள்..!

திருகோணமலையில் கடந்த இரவு ரி-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் போராளி ஒருவர் கைதாகியிருந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கிளிநொச்சியில் உள்ள அவருடைய வீட்டில் சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போதே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் குறித்த நபரின் வீட்டில் இன்று பிற்பகல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் போது அங்கு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வருமாறு, ரி - 56 ரக துப்பாக்கி ஒன்று அதற்குரிய ரவைகள் - 150, கைத்துப்பாக்கிகள் 03 அவற்றுக்குரிய, ரவைகள் -...

அமைதிபடையின் வெறியாட்டம்!! கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் இன்று

யாழ்ப்பாணம் கொக்குவில்  பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர். 1987 ஆம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்திய படையினர் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர். இப்படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50 மேற்பட்ட பொது மக்கள் துப்பாக்கியால் சுட்டும்,...

சிறுமியுடன் ஆற்றில் பாய்ந்த இளைஞரால் பதட்டம்

களனி புதிய பாலத்தின் மேலிருந்து ஆற்றுக்குள் குதித்த இளைஞரையும் சிறுமியையும் தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று (11) இரவு 11.30 மணியளவில் களனி கங்கையில் பாய்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 18 வயதுடைய இளைஞரும் 15 வயதுடைய சிறுமியுமே இவ்வாறு பாய்ந்துள்ளனர்.

அம்பாறையில் பதற்றம்..! பொலிஸாா் களத்தில்..

அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி மாவடட அரச அதிபர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு மக்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 4652 குடும்பங்களுக்குச் சொந்தமான 14,127 ஏக்கர் நிலம் அசு, அரச படைகள், மற்றும் அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி திட்டங்கள், தொழிற்சாலைகள் அமைத்தல் என்றபோர்வையில் அரசாங்கத்தால் பெருமளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வன பாதுகாப்பு, வன விலங்கு பாதுகாப்பு என்ற பேர்வையில் வன வளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களமும் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. தொல்பொருள் இடங்கள்...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சி.ரி.ஸ்கானர் இயந்திரம்

நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்பில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சி.ரி.ஸ்கானர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சி.ரி.ஸ்கானர் சிகிச்சை பிரிவு யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போதே சி.ரி.ஸ்கானர் இயந்திரங்கள் நன்கொடையாளர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், சுகாதார சுதேச போசணை அமைச்சின் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.  

பத்தாம் வகுப்பு மாணவனை ஒருவருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை மாட்டினார்

மாணவனொருவனை தனது பாலியல் இச்சைக்காக துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவனையும் நேற்று (11-10-2019) கைது செய்துள்ளனர். மொனராகலைப் பகுதி அரச பாடசாலையொன்றில் ஆசிரியையாக கடமையாற்றி வருபவர், 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை டியூசன் வகுப்பிற்கு வருமாறு, தமது வீட்டிற்கு அழைப்பித்து அம்மாணவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். மாணவன் வீட்டிலிருக்கும் போது, குறிப்பிட்ட ஆசிரியை அடிக்கடி கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வந்ததை மாணவனின் தாய்...