LATEST ARTICLES

50 இலட்சம் லஞ்சமா?? இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி! குவியும் பாராட்டுகள் – படங்கள்

இலங்கையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துணிச்சலான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் 50 கோடி பெறுமதியான போதைப்பொருள் மூடையை கண்டுபிடித்து அவற்றை மீட்க வழி செய்துள்ளார். அத்துகிரிய பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பாரிய போதைப்பொருள் மூட்டைகளை கண்டுபிடித்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்யாதிருக்க 50 இலட்சம் ரூபா லஞ்சம் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. எனினும் அதனை நிராகரித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி, அது குறித்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்திற்குரிய நபரை...

14 வயது சிறுமி கர்ப்பம்!! தந்தை கைது.

14 வயதுடைய சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் 45 வயதுடைய தந்தையை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த குறித்த தந்தை நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலியினால் சிறுமியை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது சிறுமி வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் தந்தை கைதாகியுள்ளார். மேலும் நேற்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் தந்கை ஆஜர் செய்யப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொண்ட பின்னர் குறித்த...

இன்றைய ராசிபலன்கள் – 17.10.2019

மேஷம் இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். ரிஷபம் இன்று குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். கொடுத்த கடன்களும் வசூலாகும். மிதுனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில்...

இலங்கை தீவில் கொட்டிக் கிடக்கும் தங்கம்!! வெளியான புகைப்படங்கள்

திருகோணமலை, சேருவில பகுதியில் உள்ள இரும்பு, செம்புக் கனிமங்கள் இருக்கும் இடத்தில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கத் பணியகத்தின் தலைவர் அசேல இத்தவல தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தங்க வளம் இருக்கும் இடத்திற்கு புதிய பொருளாதார பெறுமதியை ஏற்படுத்த தனியார் முதலீட்டாளர்களின் உதவியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம். இலங்கையில் தங்கம் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். சேருவில பிரதேசத்தைச் சூழ இருக்கும் 100 கிலோ மீற்றர் சுற்று வட்டத்தில் சுமார் 5 கிலோ மீற்றர்...

முச்சக்கர வண்டிச் சாரதி கொலை – சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்!

வவுனியாவில் முச்சக்கரவண்டிச் சாரதி கடத்திக்கொலை செய்யப்பட்ட எரியூட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பிலும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் பற்றி பொலிஸார் பலதரப்பட்ட கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் கொலையாளி என சந்தேகிக்கும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து அந்நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அவர் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தெரியவருகிறது. தனி நபராக தானே கொலையைப் புரிந்ததாக அவர் தெரிவித்தாகவும், குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் கழுத்திலிருந்த ஒரு பவுண் தங்க சங்கிலி மற்றும் அவர் அணிந்திருந்த...

கொழும்பின் பிரபல தமிழ் ஊடகவியலாளரிற்கு நேர்ந்த கதி

தென்னிலங்கை தனியார் தமிழ்த் தொலைக்காட்சியின் பிரபல ஊடகவியலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீரங்கா ஜெயரத்தினத்தை கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வவுனியா செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார். அந்த விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான சிறீரங்காவின் பாதுகாவலரே வாகனத்தைச் செலுத்திச் சென்றதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் சிறீரங்கா...

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் விபத்து! படங்கள்

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இராணுவத்தினரின் ரக் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரே திசையில் பயணித்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீது ரக் மோதியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். https://www.facebook.com/jaffnasevens/videos/382339912670015/ மோட்டார் சைக்கிளை முந்தியவாறு சமிக்ஞையை ஒளிரவிடாது இராணுவ முகாமிற்குள் ரக் வாகனத்தை...

இன்றைய ராசிபலன் – 16.10.2019

மேஷம் இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் நிறைவேறும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்று கருத்துக்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். மிதுனம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின்...

யாழில் வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதால் இளைஞர் கோடாரியால் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டம் பகுதியிர் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் லைகலப்பாக மாறி கொலையில் முடிவடைந்தது. இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மணியந்தோட்டம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது-33) என்பவரே கொலை செய்யட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்புத்துறை பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல் நிலை இருந்தது. இன்றும் வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியது. அந்த நபர் கோடரியால் இளைஞரின் தலையில் அடித்துள்ளார். தலையில் பலமாக அடிபட்டதால், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார் என்று...

பரீட்சை மண்டபத்தில் கட்டாயப்படுத்தி பர்தா ஆடையை நீக்கிய ஆசிரியையால் குழப்பம்

பொதுவான பாடசாலை சீருடையில் ஒரு அங்கமான 'பர்தா' அணிந்த முஸ்லிம் மாணவிகளை பரீட்சை மண்டபத்தினுள் அனுமதிக்காது முற்றாக அதனைக் அகற்றிய பின்பே பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று குருநாகல் மாவட்டத்தில் உள்ள இப்பாகமுவ கல்வி வலயத்தில் இன்று (15.10.2019) இடம் பெற்றுள்ளது. பானகமுவ அந்நூர் மத்திய கல்லூரி மாணவிகள் 8 பேர் தொழில் நுட்பம் தொடர்பான பரீட்சை திணைக்களத்துடன் தொடர்புடைய பொதுப் பரீட்சை ஒன்றிற்கு இப்பாகமுவ கவிகமுவ மத்திய கல்லூரிக்கு பரீட்சை எழுதச் சென்றுள்ளனர். அதன்போது அங்கு பரிட்சை மண்டப மேற்பார்வையாளராக இருந்த பெண்...