இரட்டைக் குழந்தைகள் பெற்ற மூதாட்டி

Loading...

மூதாட்டி ஒருவர் இரட்டைக் குழந்தைகள் பெற்ற சம்பவம் ஒன்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியிலுள்ள் நெலபார்ட்டிபாடு கிராமத்தை சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ் (80), மங்கம்மா(74) தம்பதிக்கு கடந்த 1962ம் ஆண்டு திருமணம் நடந்தது.

Loading...

குழந்தை இல்லாமல் வாடிய இவர்கள், செயற்கை கருவுறுதல் முறையில் குழந்தை பெற முடிவு செய்து, குண்டூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றை அணுகியுள்ளனர்.

இதன்படி சிகிச்சை பெற்ற மங்கம்மா, கருவுற்றபின் கடந்த 9 மாதங்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். 8 ஆவது மாதத்தில் மருத்துவமனையிலேயே அவருக்கு வளைகாப்பும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுக் காலை, 4 மருத்துவர்கள் தலைமையில், அறுவை சிகிச்சை மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளை மங்கம்மா பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், அடுத்த சில நாள்கள் குழந்தைகள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அதிக வயதில் குழந்தை பெற்ற தம்பதி என கின்னஸ் சாதனை படைக்கும் வாய்ப்பு மங்கம்மாவுக்கு உருவாகியுள்ளது.

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment