பருவத்தில் துளிர்விட்ட காதல் – பள்ளி வகுப்பறையில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை.!

Loading...

பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கே.புதூரை அடுத்துள்ளது காந்திபுரம். அந்த பகுதியைச் சேர்ந்தவர் முத்து, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

Loading...

மூத்த மகள் சந்தியா கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் அர்ச்சனா (வயது16). புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை 8 மணி அளவில் பள்ளிக்கு அர்ச்சனா வந்தார். வகுப்பறைக்குள் சென்ற அவர் திடீரென வீட்டில் இருந்து எடுத்து வந்த சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

அப்போது சக மாணவிகள் யாரும் வரவில்லை. சிறிது நேரத்தில் வகுப்புக்கு வந்த மாணவிகள் அர்ச்சனா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அலறியடித்த படி வெளியே ஓடினர்.

அர்ச்சனா தற்கொலை செய்த தகவல் கிடைத்ததும் உறவினர்கள் திரண்டு வந்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பதட்டம் ஏற்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் அர்ச்சனா உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் மோட்டார் சைக்கிளில் உடலை கொண்டு செல்லவும் முயன்றனர். இதனை போலீசார் தடுத்தனர். இதனால் அங்கு அவர்களுக்கு இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment