யாழ் நகரில் அலைந்து திரிந்த 15வயது சிறுமி..! காத்தான்குடியில் சீரழிக்கப்பட்ட கொடுமை!! 3 பேர் கைது, மிகமோசமான பின்னணி வெளியானது

Loading...

காத்தான்குடி கடையில் வேலைக்கு சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர்.

பின்னர் குறித்த சிறுமி யாழ் நகரில் அநாதரவாக திரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் எனும் அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 3 காமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Loading...

சிறுமி கடந்த மாதம் 14 ம் திகதி காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி யாழ்ப்பாண நகரில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரவில் நடமாடிய போது பொலிசார் கைது செய்ததையடுத்து குறித்த சிறுமியின் பெற்றோர் சென்று சிறுமியை பிணையில் விடுத்து அழைத்து வந்த பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வளங்கிய வாக்குமூலத்தில் குறித்த சிறுமி விபச்சார செயலில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது

இதன் பின்னர் சிறுவர் நன்நடத்தை பிரிவிக்கு முறைப்பாடு வழங்கப்பட்டத்தையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது

இதனடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த ஜூலை மாதம் குறித்த சிறுமியின் நண்பி ஒருவருடன் கல்முனைக்கு சென்று அங்குள்ள பஸ்தரிப்பு நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடை முதலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்படுத்தி அந்த சிறுமியை விபச்சார வியாபாரத்துக்கு விட்டுள்ளார் நண்பி.

இதில் பொலன்றுவையைச் சோந்த பஸ் நடத்துனர் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் காதலன் ஆகியோர் இந்த சிறுமியுடன் பாலியல் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து கல்முனையை சேர்ந்த கடை உரிமையாளர், பஸ் நடத்துனர் சிறுமியின் காதலன் ஆகியோரை நேற்று திங்கட்கிழமை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்தாகவும் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment