இலங்கை வாழ் மக்களே அவசர எச்சரிக்கை !!

Loading...

25 மில்லியன் ANDROID தொலைபேசிகளுக்கு புதிய MALWARE அல்லது தீங்கிழைக்கும் தன்மை தாக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக புதிய கண்டுபிடிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த MALWARE ஆபத்து சீன இணைய நிறுவனத்திடம் உள்ள ANDROID கட்டமைப்பிற்கான “9APPS” என்ற பெயரில் 25 மில்லியன் ANDROID கையடக்க தொலைபேசிகளுக்கு பரவியுள்ளதாக கண்டுபிடிப்புகளில் தெரியவந்துள்ளது.

9 APPS என்ற இந்த ANDROID ஆபத்து சீனா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளை இலக்கு வைத்து இரண்டாம் தரப்பினால் நவீன மயப்படுத்தப்பட்டு விற்பனையாகும் ANDROID கையடக்க தொலைபேசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை பிரபலமடைந்துள்ளது.

Loading...

இந்த ஆபத்து 25 மில்லியன் கையடக்க தொலைபேசிகளுக்கு பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் 303,000 தொலைபேசிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட 137,000 கையடக்க தொலைபேசிகள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக இரண்டாவது தரப்பு ஊடாக நவீனப்படுத்தப்பட்ட WHATSAPP, OPERA MINI, FLIPKART, SWIFTKEY போன்றவைகளின் ஊடாக பரவியுள்ளது.

இந்தப் பாதிப்பின் மூலம் கையடக்க தொலைபேசியில் உள்ள ஆவணங்கள், புகைகப்படங்கள் இலக்கங்கள் போன்றவை வெளியாட்கள் பெற்றுகொள்ள முடியும் என்பதனால், இலங்கையர்கள் யாரும், இரண்டாம் தரப்பினரால் நவீனப்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் இலங்கை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment