பேஸ்புக் நேரலையில் தற்கொலை… 4 பக்க கடிதத்தில் இருந்த இளைஞனின் உருக்கமான வார்த்தைகள்

Loading...

இந்தியாவில் காதலிக்கு வேறு நபருட நிச்சயம் செய்யப்பட்டதால், வேதனையடைந்த காதலன் பேஸ்புக் நேரலையில் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷியாம் சேகர்வார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

Loading...

இந்நிலையில் சமீபத்தில் அந்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், மிகுந்த வேதனையில் ஷியாக் சேகர்வார் இருந்துள்ளார்.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை தன் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்ற அவர், காதலிக்கு நிச்சயம் செய்யப்பட்டதை தாங்க முடியாமல், பேஸ்புக் நேரையில் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் மற்றும் அவரின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இது குறித்த தகவலை அவரின் வீட்டிற்கு தெரிவித்துள்ளனர்

ஆனால் அதற்குள்ளாகவே இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் அதன் பின் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இளைஞன் அருகில் 4 பக்கம் கடிதம் ஒன்று இருப்பதையும் போலீசார் கண்டுள்ளனர். அதை பார்த்த போது, அதில் என்னுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை, தயவு செய்து யார் மீதும் நடவடிக்கை எடுக்காதீர்கள்.

நான் காதலித்து வந்த பெண், வேறொருவரை திருமணம் செய்யவுள்ளதால், அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது, அதிகம் வேதனையடைந்துவிட்டேன், வேலையை கூட இழந்துவிட்டேன்.

நான் இறந்தபின்பு என்னுடைய உடல் உறுப்புகளை மறக்காமல் தானம் செய்துவிடுங்கள். இந்த முடிவிற்காக என்னுடைய அம்மா – அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment