கொடுமையிலும் கொடுமை – ஆற்றங்கரையோரம் 90 வயது மூதாட்டியை தவிக்க விட்டு சென்ற உறவினர்கள்..!

Loading...

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை ஒருவர் வேனில் அழைத்து வந்தார்.

பின்னர் அவர் பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த மூதாட்டியிடம் உறவினர்கள் யாராவது சொத்தை அபகரித்து கொண்டு இங்கு கொண்டு விட்டுள்ளனரா? அல்லது மன நோயாளியா? என்று தெரியவில்லை.

Loading...

இது பற்றி மூதாட்டியிடம் விசாரித்தால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மூதாட்டியின் காலில் வீக்கம் ஏற்பட்டு வழியால் துடித்தார்.

மேலும் பசியால் அவர் அழுதார். அவர் அழுவதை பார்த்த அந்த பகுதி மக்கள் உணவு வாங்கி கொடுத்து விட்டு செல்கின்றனர்.

இந்த மூதாட்டியை மீட்டுசெல்ல தொண்டு நிறுவனங்கள் முன்வருமா? என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment