தலைவரின் பெயரை நெஞ்சில் வைத்து, களங்கமற்று சிரிக்கும் இந்த பாலகன் எம்மிடையே இல்லை.!!

Loading...

தமிழகத்தை சேர்ந்த ஈழ விடுதலைச் செயற்பாட்டாளர் டேவிட் பெரியார் அவர்களின் இளைய மகனான இந்த பத்து வயது சிறுவன் மில்லர் திலீபன், (Jul 21) சிறுசேரி ஏரியில் குளிக்கும் போது மூழ்கி மரணமானார்.

எமது விடுதலைப்போரில் ஆகுதியானவர்களின் பெயரை தனது பிள்ளைகளுக்குச் சூட்ட எத்தனை பேர் நம்மிடையே உண்டு?

Loading...

எம் தலைவனின் பெருமைகளையும், இந்த போராட்டத்தின் வரலாற்றையும் தம் பிள்ளைகள் பேசக்கேட்க அவர்களை ஆளாக்கி வருகிறோமா?

ஆம், என்போர் வரிசையில் உள்ள மிகச் சிலரில் டேவிட் பெரியார் ஒருவர்.

அத்துடன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு பல வழிகளிலும் பங்களிப்பு செய்து வருபவர். அதற்காக இன்றுவரை வழக்குகளும் தண்டனைகளும் அனுபவித்து வருபவர்.

பாலகன் மில்லர் திலீபனின் பிரிவு மிகுந்த வேதனையளிக்கிறது. உமக்கு நாம் செலுத்தும் அஞ்சலி உங்கள் பெயர் எம்வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்கும்.

நினைவுகள் நெஞ்சில் நீங்காதிருக்கும் ! உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் !

இங்கே கிழிக் செய்து இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்

Loading...

Related posts

Leave a Comment